பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் சாத்தான்கள் உள்ளதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

சமீப காலமாக உலகின் பல்வேறு நாடுகளில் பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கேரளாவில்இ கன்னியாஸ்திரிகளை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் பாதிரியார்க் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவி விலகினார்.

அதே போல் அமெரிக்காவின் தியோடர் மெக்காரிக் என்ற பாதிரியார் பதவி நீக்கப்பட்டார்.

பாலியல் குற்றச்சாட்டு குறித்து வாடிகன் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் போல் பிரான்சிஸ் பேசியதாவது  “பாதிரியர்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் பின்னணியில் சாத்தான்கள் உள்ளன. பாதிரியார்களின் உள் இருக்கும் சாத்தான்கள் தான் இப்படி செய்ய தூண்டுகின்றன. அவை பாதிரியார்களின் நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளன.” என தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)