புதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்ற திருமண விழாவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியாதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது!

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த் அவர்களின் மகளத திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்கவுள்ளார் என தகவல்கள் பரவிய நிலையில் திருமண மண்டபத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. திருமணம் மண்டபம் முழுவதும் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் நிறைந்தது.

இந்த திருமண நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன்  கூட்ட நெரிசல்களைத் தாண்டி மண்டபத்துக்கு வந்தார். இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி, பரிசு வழங்கினார். அப்போது மேடையினை நெறுங்கி ரசிகர்கள், நடிகர் விஜயினை வெளியே செல்லவிடாத அளவிற்கு மறித்தனர். இதனையடுத்து பவுன்ஸர்கள் உதவியோடு விஜய் மற்றும் அவரது மனைவி வெளியே கொண்டுவரப்பட்டனர்.

இந்நிகழ்வால் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சிறு காயங்களுடன் மண்டபத்தை விட்ட வெளியேறினர் என தகவல்கள் வெளியாகி வருகின்றது. பெரும் ரசிகர் கூட்டத்தினை கண்ட திருமண மண்டபம் பொதுக்கூட்டம் நடந்து முடிந்த திடலைப் போல் காட்சியளித்தது!

(Visited 1 times, 1 visits today)