தெலங்கானா மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதியை  மணமகள் குடும்பத்தார் கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுளது!

தெலுங்கனா மாநிலத்தைச் சேர்ந்தவர் அம்ரூதா, உயர் சாதி இந்து வகுப்பைச் சேர்ந்த இவர் அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரணய் பெருமுல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பெற்றோரின் விரும்பமில்லாமல் திருமணம் செய்துக்கொண்ட இத்தம்பதியருக்கு தொடர்ந்து அம்ரூதாவின் குடும்பத்தார் தரப்பில் இருந்து அச்சுருத்தல்கள் எழுந்த வண்னம் வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பிரணய் பெருமுல்லா-வினை அம்ருதாவின் குடும்பத்தார் வெட்டிக்கொண்றுள்ளனர். கர்ப்பமாக இருந்த அம்ருதாவினை மருத்துவ பரிசோதனைக்காக பிரபல மருத்துவமனைக்கு கொண்டு, சென்று திரும்புகையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர காட்சிகள் மருத்துவமனை வாயிலில் இருந்து cctv கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவில்  அம்ரூதாவும்  பிரணவும் இயல்பாக பேசிகொண்டே மருத்துவமனையிலிருந்து வெளியே வருகின்றனர். அப்போது திடீரென மருத்துவமனையின் வாசற் கதவகருகே செல்லும்போது  பின்னாலிருந்து உயரமான நபர் ஒருவர் கையில் அரிவாளுடன் வேகமாக அவர்களை நோக்கி நடந்து செல்கிறார். பிரணவின் அருகில் சென்ற அந்நபர்  பின்புறமிருந்து அரிவாளால் பிரணவை கொடூரமாக வெட்டுகின்றார்.

நிலை தடுமாறி கீழே விழுந்த பிரணவின் பின் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியோடுகிறார். இதைப் உடன் இருந்து பார்த்து அதிர்ச்சியடைந்த அம்ரூதாவும்  கூடச்சென்ற இன்னொரு பெண்ணும் உதவி கேட்டு மருத்துவமனைக்குள் ஓடி வருகின்றனர். ஆனால் உதவி செய்ய பிறர் வருவதற்கு முன்னதாகவே சம்பவ இடத்தில் பிரணவ் உயிர் இழக்கின்றார்.

ரியல் எஸ்டேட் பிரமுகரான அம்ரூதாவின் தந்தை தான் கூலிப்படை வைத்து இந்த கொலையினை செய்திருக்க வேண்டும் எனவும்  அவரை கைது செய்யவேண்டும் எனவும் பிரணவின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். எனினும் இக்கொலை தொடர்பாக ஆதாரங்கள் சிக்காத நிலையில் cctv காட்சிகளை கொண்டு காவல்துறையினர் கொலையாளியை தேடி வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)