பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இருப்பினும், பிரதிவாதி சார்பான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் வேறொரு வழக்கில் ஆஜராகியுள்ளதால் இந்த வழக்கை மற்றொரு தினத்திற்கு ஒத்தி வைக்குமாறு அவரின் கணிஷ்ட சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

அதன்படி இந்த வழக்கை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன அறிவித்துள்ளார்

(Visited 1 times, 1 visits today)