நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இறுதி சில நாட்களில் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

அதன்படி தேர்தல் பணிகளுக்காக பஸ்களை வழங்கியதன் மூலம் அறவிடப்படவேண்டிய தொகை எதிர்வரும் சில தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து சபையின் போக்குவரத்து பொது முகாமையாளர் ஆர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்

(Visited 38 times, 1 visits today)