றக்குவானை, கஹவத்தை, வடக்கு பனாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குறித்த நபர் வௌியில் மின்குமிழை சரி செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது குறித்த நபர் காயமேற்பட்டு விழுந்திருந்ததையடுத்து கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)