சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்று தமிழகத்தை பெருமைப் படுத்தியவர் பாடகர் சுந்தர ஐயர். இவர் வாய்ப்பு கிடைக்காமல் வறுமையின் பிடியில் தவித்து வருகின்றார்.

ஜோக்கர் திரைப்படத்தில்  ‘ஜாஸ்மின்’ பாடலைப் பாடியவர் சுந்தரய்யர். இதற்காக 2017ல் சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார். அவரின் பாடலை அங்கிகரிக்கப்பட்டதே தவர, அவருக்கு தொடர்ந்து பாட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார்.

வறுமை தாங்க முடியாத சுந்தரய்யர், தனது முகநூலில், “பாட வாய்ப்பு கொடுங்கள் அல்லது வாழ பணம் கொடுங்கள்” என இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பெரும் பணம் படைத்தவர்கள், நண்பர்கள் என 200க்கும் மேற்பட்டோருக்கு செய்தி அனுப்பியதாக கூறியுள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக, யாரிடத்திலிருந்தும் வாய்ப்பும் வரவில்லை, பணமும் வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழக்கமே இல்லாத தீபன் என்பவர் 1000 ரூபாயை எனது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். வேலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் என் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்களாக அவர்கள் இருவரும் மாறிவிட்டனர். அவர்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். அண்மையில் அறம் படத்தில் ‘புது வரலாறே’ என்ற பாடலை சுந்தரய்யர் பாடியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)