இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் டேவிட் பம்பில் லாயிட்-க்கு பாங்க்ரா நடனம் கற்றுக்கொடுத்த ஹர்பஜன் சிங்…!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடை பெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு வர்ணனையாளராக இருக்கும் ஹர்பஜன், தன் சக வர்ணனையாளருக்கு பஞ்சாபின் பாங்க்ரா நடனத்தை கற்றுக் கற்றுக்கொடுத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான இந்திய வர்ணனையாளர்கள் குழுவில் குறைந்த அளவிலான இந்திய முன்னாள் வீரர்களே இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவராக ஹர்பஜன் சிங் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன் அதிகம் வர்ணனை செய்து பழக்கமில்லாத ஹர்பஜன்இ இங்கிலாந்தில் தன் வேலையை இதுவரை சிறப்பாகவே செய்து வருகிறார். சில சமயம் சர்ச்சையை கிளப்பும் விஷயங்களையும் பேசுவதால், அவரது பேச்சுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதை தொடர்ந்து, ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பிரபல இங்கிலாந்து வர்ணனையாளர் டேவிட் பம்பில் லாயிட் ஹர்பஜன் சிங் உதவியுடன் பாங்க்ரா நடனம் ஆடியுள்ளார்” இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

(Visited 1 times, 1 visits today)