ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.தே.க இன் உறுப்பினர்களுக்கு இடையில் கூட்டு அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக எமது நிருபர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நல்லாட்சியை தொடர்ந்து நடத்தி செல்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பாக கலந்துரையாட விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சஜித பிரேமதாச தெரிவித்தார்.

(Visited 19 times, 1 visits today)