மக்கள் பலம் கொழும்பிற்குஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி மூலம் எந்தவொருநபரையும் கஷ்டத்திற்கு உட்படுத்துவது நோக்கம் இல்லை எனவும் இருப்பினும் பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்கு உள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொழும்பிற்கு வருவதானால் கொழும்பு இன்று தூங்கா நகரமாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)