5 நாட்களாக புளத்சிங்கள நகரில் உண்ணாவிரதம் இருந்து வந்த பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று தனது  உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

இந்நிலையில்.அவரது உடல் நலம் மோசமடைந்துள்ளதால் அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமை மற்றும் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் முறைபாடு தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 5 நாட்களாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும புளத்சிங்கள நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

(Visited 41 times, 1 visits today)