யாழ் மாவட்டத்தின் சில முக்கிய பகுதிகள் நாளை மறுதினம் விடுவிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஆணைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம், மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் மற்றும் வசாவிளான் குறும்பசிற்றி பகுதியிலுள்ள கூட்டுறவு சங்க கிளை கட்டிடத்துடன் இணைந்த கிராம அபிவிருத்தி சங்க கட்டிடம் உள்ளிட்ட சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களை விடுவிக்குமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைகமையவே குறித்த பகுதியை விடுவிக்க படையினர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)