விசுவாசம் படத்தில் டி இமான் இசையில் தல அஜித் ஒரு பாடலை பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் 4வது முறையாக இணைந்துள்ளார் அஜித். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படம் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், டி இமான் இசையமைக்கின்றார். இந்த படத்தில் தல அஜித் முதல் முறையாக ஒரு பாடலைப் பாட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

அஜித் படங்கள் வெளியாகும் போது சும்மாவே தியேட்டர்களில் பாடல்களுக்கு ரசிகர்கள் ஆட்டமும், விசிலும் போட்டு பட்டையை கிளப்புவார்கள். அப்படி இருக்க அஜித்தே பாடலை பாடினால் தியேட்டரே அதிருமே…

(Visited 91 times, 1 visits today)