நடிகர் விஜய் தற்போது நடிதது வரும் படத்தில் ரவுடிகளை புரட்டி எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62’ வது படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்பட வில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

தொடர்ந்து மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. முக்கியமான சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் விஜய் ஒருவரை தூக்கி அடிப்பது போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படத்திற்கு இசைப்புயல். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

(Visited 192 times, 1 visits today)