புதிய அரசாங்கம் ஒன்று அமைப்பது தொடர்பில் எந்தவொரு கட்சிகளும் இதுவரை எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குமா என்ற கேள்விக்கு   பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எந்தவொரு கட்சியினதும் பிரதிநிதிகளும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இதனால் அது குறித்த தீர்மானம் எடுக்கும் தேவையொன்று எழவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

(Visited 51 times, 1 visits today)