யோ.தர்மராஜ்

நாளை 29 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவிருந்த புகையிரத தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
தங்களுடைய சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர கோரி ஏற்கனவே புகையிரத தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.

அதன் பின்னர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக ஜனாதிபதி கூறிய பின்னரே இந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சம்பளப் பிரச்சனை தொடர்பான அமைச்சரவை பத்திரம் % நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையில் அரச ஊழியர்களுக்கான சம்பள பிரச்சனை தொடர்பாக ஆராய்வதற்கு 15 பேர் அடங்கிய ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் அமைச்சரவைக் (இன்றைய) கூட்டத்தில், தங்களுடைய சம்பளப் பிரச்சனைக்கு தீரவு பெற்று தராவிடின் நாளை(29) ஆம் திகதி முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.

இந்த நிலையில் ஜனரிதபதியால் அரச ஊழியர்களுக்கான சம்பளப் பிரச்சனை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று ஜனாதிபதியுடன் சந்தித்ததையடுத்து நாளை முதல் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை புகையிரத தொழிற்சங்கங்கள் கைவிட்டுள்ளது.

(Visited 18 times, 1 visits today)