ஐ.தே.க.வைச் சேர்ந்த ஒருவர் அடுத்த ஜனாதிபதியாக வருவதே காலத்தின் தேவை என நதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியின் விபரம்.

கே: அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா?
ப: நிச்சயமாக இல்லை

கே: இம்முறை பொது வேட்பாளரை உங்களது கட்சியிலிருந்து களமிறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளீர்களா?

ப: உண்மையில் கட்சி என்றவகையில் நோக்கும்போது, எமது அடிமட்ட öŒயற்பாட்டாளர்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கியதேசியக் கட்சியிலிருந்தே களமிறக்கப்பட வேண்டும் என்பதாகும்.

கே: உங்களது விருப்பம் என்ன? ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது ஐக்கிய தேசியக்கட்சியின் வேறொரு உறுப்பினரா?

ப: 1994 ஆம் ஆண்டின் பின்னர் 25 வருடங்களாக ஐக்கிய தேசியக்கட்சியைச் ÷Œர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக இருந்ததில்லை. அதேபோல ஐக்கிய தேசியக் கட்சிக்கென தனியானதொரு அரŒõங்கமொன்று இல்லாதிருந்தமை எமக்கான பாரியதொரு ஏமாற்றம். நாம் சந்திரிக்காவுடன் இணைந்து ஆட்சியமைத்தோம். 25 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் ஆட்சி அதிகாரங்கள் காணப்பட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டுமக்களை சிரமத்துக்குள்ளாக்கி ஊழல், ஏமாற்றங்களைச் öŒ#து கோட்டை கட்டியுள்ளனர். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அநியாயம் நிகழ்ந்துள்ளது. எனவே; ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக வருவது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன்.

கே: நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதாக அரŒõங்கம் உறுதியளித்தது. மீண்டும் ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கு அரŒõங்கம் முயற்சிப்பது எந்தளவு பொருத்தமானது?

ப: 1994 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளேன். இன்றும் அவ்வாறு தான். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறி÷Œன கொடுத்த வாக்குறுதிகளில் 50 சதவீதமானவற்றை நிறைவேற்றியுள்ளார். 19 ஆம் திருத்தத்தின் ஊடாக அவருக்கான அதிகாரங்கள் பலவற்றை நீக்கிக்கொண்டார். அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளும் சமபலம் பொருந்தியதாக அமைந்துவிடும்.

கே: கடந்த தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தீர்கள். அதுதொடர்பில் இன்று திருப்திகொள்ள முடிகிறதா?

ப: ஆம். பொது வேட்பாளரொருவரை களமிறக்குவது தொடர்பில் 2013 ஆம் ஆண்டு நாம் இத்தாலியிலிருந்து துருக்கி ல்லும் கப்பலொன்றில் கலந்துரையாடலொன்றை நடத்தினோம். அவ்வேளையில், சந்திரிக்காவின் தெரிவு மைத்திரிபால சிறி÷Œனவாக இருந்தது. இறுதியில் அவரே தெரிவானார். அவர் பல ஆபத்துகள் இருப்பது தெரிவித்தும் அŒõத்தியமான வகையில் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது இந்த அரŒõங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முயன்ற அனைவருக்கும் தெரியும்.

கே: அதிகாரத்தை வழங்காமைக்காக அரŒõங்கத்துக்கு எதிராக சதிகளை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்தீர்கள். இவை அரசியல் நாடகமா?

ப: துளியளவிலும் நாடகமல்ல. அதுதொடர்பான அறிக்கை கிடைக்கும் வரையில் நான் எதிர்ப்பார்த்துள்ளேன். பொலிஸ் மா அதிபரோ அரŒõங்கத்தின் அமைச்சரொருவரோ இவ்வாறானதொரு பாரிய முறைப்பாட்டை யாதிருப்பதையிட்டு நாம் ஆச்சரி>யப்படவேண்டும். இன்னும் சில மாதங்கள் அவதானித்து அது தொடர்பில் நாடாளுமன்ற உரையொன்றை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளேன்.

கே: மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி, முறையற்ற விதத்தில் பல பில்லியன் டொலர்களை வெளிநாட்டுக் கணக்குகள் வைத்துள்ளதாக நீங்கள் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளீர்கள். ஏன் அவற்றை நிரூபிக்கவில்லை?

ப: தற்போது, நிரூபிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷக்கள் பல பில்லியன் டொலர்களை வைத்துள்ளனர் என்று நான் இன்னமும் கூறுவேன். துபா# கணக்கில் உள்ளதென்பதும் தெரியும். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அவற்றை வெளிக்கொண்டு வந்திருந்தது. அந்தப் பத்திரிகை காரணமின்றி இலங்கையின் தலைவரொருவரைப் பற்றி öŒ#தி வெளியிடமாட்டாது.

ராஜபக்ஷக்களுக்கு எதிராக தற்போது எத்தனை வழக்குகள் காணப்படுகின்றன? நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக எத்தனை வழக்குகள் உள்ளன? கோட்டாபயவும் யுத்தத்தின்போது சுரண்டினார் என்பது நிரூபணமாகிவருகிறது. அதேபோல அனைத்தும் நிரூபிக்கப்படும்.

கே: ஊடக சுதந்திரம் பற்றி நீங்கள் எவ்வளவு பேசினாலும், இன்றும் ஊடக அடக்குமுறைகள் அவ்வாறே காணப்படுகின்றதல்லவா? உதாரணமாக ரீ.என்.எல். தொலைக்காட்சி தொடர்பான சம்பவங்கள் குறித்து அரங்கத்துக்கு எதிராகப் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதே?

ப: அதில் சிறு தவறான புரிதல் காணப்படுகின்றது. அது ஊடக அடக்குமுறை கிடையாது. இன்றும் ரீ.என்.எல். தொலைக்காட்சி மற்றும் வானொலி ÷Œவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் öŒல்கின்றது.

கே: ஊடகசந்திப்புகளின் போது, ஊடகவியலாளர்களுக்கு இரண்டு கேள்விகளுக்கு மேல் வினவுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் இடமளிப்பதில்லை என சில ஊடகவியலாளர்கள் குற்றஞ்Œõட்டியுள்ளனர். அது தவறில்லையா அமைச்சரே?

ப: தவறு. சில வேளைகளில் தேவையற்ற விதத்தில் கேள்விகளை கோர்வையாக்கிக் கொள்ளும்போது எங்காவது நிறுத்தவேண்டும். நீங்களும் கண்டிருப்பீர்கள்.

கே: நாட்டின் பொருளாதரம் கடுமையாக வீழ்ச்சிகண்டுள்ளமை அரŒõங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்Œõட்டாக கருதப்படுகிறது. நிதியமைச்சர் என்ற வகையில் அதற்கு நீங்கள் நேரடியாகப் பொறுப்புகூறவேண்டுமென நான் கூறுகிறேன்?

ப: நிச்யமாக. எனினும், சிறிதளவாவது பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இவ்வருடமே எமது ஆரம்பக் கணக்குகளில் அதிகரிப்பும் காட்டப்படுகிறது. அதாவது எமது வரவு லவுகளுக்கிடையிலான அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்பை மென்மேலும் வளர்ச்சியடையச் யவேண்டும். 2015 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடி ஏற்பட்ட ஜீ.எஸ்.பீ. இல்லாமல் போனது. ஐரோப்பாவுக்கான டூனா மீன் ஏற்றுமதியும் தடை யப்பட்டது. மறுபுறத்தில் பாரிய கடன்சுமைகளுடன் போராடவேண்டியிருந்தது. எனினும் , இன்று நாம் பாரிய முயற்சிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரான நிலைக்கு கொண்டுவந்துள்ளோம் என்பதை நாம் மட்டுமல்ல உலக வங்கியும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கே: அரச நிறுவனங்களில் வேலைவா#ப்பை வழங்குவதற்கு இயலுமை இல்லையென நீங்கள் கூறினீர்கள். எனினும், அரச வேலைவா#ப்புகள் அரசியல் நியமனங்களாக அலரி மாளிகையினுள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே?

ப: அலரி மாளிகையினுள் பிரதமர்கள் என்ற வகையில் நாட்டுமக்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அதிகாரம் உள்ளது. தற்போது அளிக்கப்படும் நியமனங்கள் அவ்வாறானதல்ல. காடர் மூலம் அளிக்கப்படுகிறது. கடந்த அரŒõங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல நியமனங்கள் வழங்கப்பட்டன. தற்போது, அவர்கள் தமது நியமனத்தை நிரந்தரமாக்ககோருகின்றனர். ஓவூதியம் கோருகின்றனர். இவ்வாறு öŒன்றால் நாட்டின் நிறுவனங்கள் நட்டமடையும். நாம் தனியார் துறையில் பல நியமனங்களை வழங்குகின்றோம்.

கே: எரிபொருள் விலை குறைக்கப்படுகிறது. பின்னர் அதிகரிக்கப்படுகிறது. கூட்டு அரŒõங்கத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக தனிதனியாக தீர்மானங்கள் எடுக்கப்படுகிறதே?

ப: இதனை அமைச்சரவையின் அனுமதியுடனேயே ஆரம்பித்தோம். வளர்ச்சியடைந்த இந்தியா போன்ற நாடுகளிலும் இவ்வாறான விலைச்சூத்திரங்கள் காணப்படுகிறது. எனினும், தினமும் மாற்றக்கூடிய இயலுமையும் தொழில்நுட்பமும் எம்மிடம் இல்லை. இந்தியாவில் என்றால் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் இரவு 12 மணிக்கு விலையை மாற்ற முடியும்.

நன்றி: மவ்பிம

(Visited 33 times, 1 visits today)