குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழி-யை நாம் அனைவரும் கேள்விபய்ட்டிருப்போம்.
பொதுவாக நாம் ஆல்கஹால் குடித்தாலே உடலுக்கு கெடுதி என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆல்கஹாலை அளவாக எடுத்துக் கொண்டால்  நிச்சயம் அவையும் உடலுக்கு நன்மையைக் கொடுக்கும்.

அதிலும் ஆல்கஹாலில் பீர், விஸ்கி, ஒயின் போன்றவற்றை அளவாக எடுத்து வந்தால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இருப்பினும் இவற்றில் பீர் குடிப்பதால் இன்னும் அதிக அளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

அளவுக்கு மீறினால் அமிதமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரியும். அது போன்று தான் நமது உணவு பழக்கமும். அளவாக சாபிட்டால் அது நமக்கு நன்மைதரும். அளவுக்கு மீறினால் விஷமாக மாறும்.

* பீர் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது.

* ஒரு நாளைக்கு சுமார் ஒரு பாட்டில் பீர் அருந்துபவர்களுக்கு 20 – 50மூ இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

* பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது.

* பீர் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது

* பீர் வைட்டமின் செறிந்தது. பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன. மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் டீ6 , விட்டமின் டீ12.

* தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு பீரில் உள்ள நிக்கோடினிக் அமிலங்கள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்பட்டு நல்ல உறக்கம் கிடைக்கும்.

* பீர் குடிப்பது மனஇறுக்கத்தை தளர்த்தி மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

* பீர் சிறுநீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைதடுக்கிது என்று தெரிவித்துள்ளார்.

* இதில் உள்ள மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் கல்லீரலில் உண்டாகும் கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.

(Visited 125 times, 1 visits today)