3200 ஆண்டுகள் பழமையான உலகின் மிகவும் சுவையான சீஸ் துண்டை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீஸ் நாள் ஆக ஆக சுவையாகும் என்று கூறுவார்கள் அப்படி என்றால் இத்தாலியைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் 3200 ஆண்டுகள் பழமையான சீஸ் துண்டுதான் உலகின் மிகவும் சுவையானது!

இத்தாலியன் கட்டானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் கி.மு.13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டஹ்மீஸ் என்ற மேயரின் பிரமிடில் நடத்திய ஆய்வின் போது சீஸ் துண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உடைந்துபோன ஜாடி ஒன்றில் இந்த சீஸ் துண்டு இருந்திருக்கிறது.

இது பற்றி Analytical Chemistry என்ற ஆய்விதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதை எழுதிய ஆராய்ச்சியார்கள்இ இந்த சீஸ் துண்டு அந்த சவப்பெட்டியில் இருப்பவர் உயிருடன் இருந்தபோது உண்ட உணவாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும்இ இந்த சீஸ் துண்டு மிகப்பழமையானது என்பதால் இதில் உயிர்கொல்லும் பொடி நுண்ணுயிரிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Archaeofood என்று அழைக்கப்படும் பழமையான உணவுப்பொருட்களை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பது தொல்லியல் ஆய்வில் ஒரு பிரிவாக விளங்குகிறது. இந்த சீஸ் அத்துறை ஆராய்ச்சியில் பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது. உலகின் பழமையான சீஸ் என்று இது அழைக்கப்படுகிறது.

(Visited 163 times, 6 visits today)