அமெரிக்க அரசு எம்.எஸ். 13 என்ற முக்கிய கிரிமினல் கும்பலைப் பிடிக்க பேஸ்புக் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது.

சர்வதேச அளவில் அறியப்பட்ட எம்.எஸ். 13 கும்பல் (MS 13 gang) அமெரிக்காவில் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையது. இந்த கும்பலை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிருங்கங்கள் என்று விமர்சித்தார். இந்த கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க அந்நாட்டு அரசு பேஸ்புக் நிறுவனத்தின் உதவியைக் கேட்டிருக்கிறது.

குற்றவாளிகள் தங்களுக்குள் பேஸ்புக் மெசெஞ்சர் அப்ளிகேஷன் மூலம் பேசிக்கொள்கிறார்கள் என்றும் அவர்கள் பேசுவதை துப்பு துலக்க அவர்களது மெசேஜ்களை டிகிரிப்ட் செய்ய வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திடம் அமெரிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு பேஸ்புக் நிறுவனம் தரப்பில் எந்த பதிலும் இதுவரை வெளியாகவில்லை.

ஏற்கெனவேஇ ஆப்பிள் நிறுவனத்திடம் அமெரிக்க அரசு குற்றவாளி ஒருவரின் ஐபோனை திறக்க (ருடெழஉம) உதவி கேட்டபோது  அதனைச் செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது நினைவுகூரத்தக்கது.

(Visited 66 times, 1 visits today)