நடிகர்கள்; நயன்தாரா,யோகி பாபு,சரண்யா பொன்வண்ணன்,அறந்தாங்கி நிஷா,ஜேக்லின்,நவீன் குமாா்

இயக்கம்; நெல்சன் திலீப்குமாா்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமாா் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நகைச்சுவை நடிகா் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, பிரபல தொகுப்பாளினி ஜேக்லின், நவீன் குமாா் உள்ளிட்ட பலா் நடித்துள்ளனா். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளாா்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக வரும் நயன்தாரா, ரங்கோலி வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் ஒருசமயம் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து விடுபட்டு, அந்த கும்பலை எப்படி பிடித்துக் கொடுக்கிறாள் என்பதே கதை ஆகும்.

படத்தை நகர்த்தும் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இவரின் தாயாக சரண்யா பொன்வண்ணன், தங்கையாக ஜேக்லின். இது நெல்சன் திலீப்குமாரின் முதல் படமாக இருந்தாலும், படத்தின் டிரைலரே மிக சிறப்பாகவும், வரவேற்பும் பெற்றுள்ளது.

(Visited 43 times, 1 visits today)