திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் ரத்ன குமார். தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதில் அமலா பால் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலாபால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட்இ பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள்.

ஆனால் இந்த படம் மேல் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது. “ஆடை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 22 times, 1 visits today)