சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரும்  7 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பீட்டர் கோஜோவ்சிக்கை (ஜெர்மனி) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை சந்தித்தார். 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் கிவிடோவா 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவை வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த சீசனில் கிவிடோவா பெற்ற 40-வது வெற்றி இதுவாகும்.

(Visited 20 times, 1 visits today)