நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பின் 75 வீதமான தேர்தல் வட்டாரங்களின் இறுதி முடிவுகள் இரவு 08.30 மணிக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாகவும் முழுமையாக நாளை நண்பர்களுக்குள் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இன்றைய வாக்களிப்பின் போது எதுவித பாரிய அசம்பாவிதங்களும் பதிவாகியிருக்கவில்லை. தேர்தலுக்கு பின்னரான காலத்தையும் இதுபோன்று அமைதியானதாக பேணுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(Visited 128 times, 1 visits today)