ணையத்தில் வைரலாகி வரும் KiKi Challenge-னால் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கார் காற்றில் பறந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

பிரபல பாப் பாடகர் டார்க்கியின் ‘In my feelings” என்னும் பாடல் தொடர்பான சவால்கள் இணைய பிரியர்களை தற்போது சுண்டி இழுத்துள்ளது. பாப் பாடகர் டார்க்கியின் Scorpion என்னும் இசை ஆல்பம் கடந்த மாதம் வெளியானது. இந்த இசை கோப்பில் இடம்பெற்றுள்ள ‘In my feelings’ என்னும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

https://twitter.com/twitter/statuses/1023128843861807104

இதனை தொடர்ந்து இந்த பாடலுக்கு தொடர்பாகும் வகையில் “Kiki Challenge” அல்லது In my feelings challenge”  என்னும் பெயரில் இணையத்தில் ரசிகர்கள் புது சவால் ஒன்றினை அறிமுகம் செய்தனர். அதாவது… இந்த பாடலினை வாகனத்தில் ஒலிக்க வைத்துவிட்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து நடனமாடிக்கொண்டு வானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பது தான்.

இந்த சவாலினை பிரபலங்கள் பலரும் முன்னெடுத்து செய்து வரும் நிலையில், இணைய ரசிகர்கள் சிலர் பழைய பாடல்களுக்கு இந்த Kiki  பாடலின் ஒலியினை பின்இணைத்து பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சவாலினால் ஏற்பட்ட விபரீத வீடியோ ஒன்றினை இணைய பிரியர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் பங்கேற்ற ஜோடி இருவரம் “Kiki Challenge” -னை முன்னெடுக்க அவர்கள் வந்த கார் தனியே சென்று விபத்துக்குள்ளாகி காற்றில் பறக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை.

(Visited 152 times, 9 visits today)