2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியாகும் போது பதிவாகியுள்ள வாக்கு நிலவரங்களின் படி,

கம்பஹா மாவட்டத்தில் 75%, மாத்தளை மாவட்டத்தில் 80%, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 80%, நுவரெலியா மாவட்டத்தில் 70%, பொலன்னறுவை மாவட்டத்தில் 75%, அநுராதபுரம் மாவட்டத்தில் 85%, கிளிநொச்சி மாவட்டத்தில் 76%, வவுனியா மாவட்டத்தில் 72% வாக்குப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 80%, காலி மாவட்டத்தில் 75%, குருநாகல் மாவட்டத்தில் 78%, இரத்தினபுரி மாவட்டத்தில் 60%, கேகாலை மாவட்டத்தில் 70%, கண்டி மாவட்டத்தில் 65%, மாத்தறை மாவட்டத்தில் 70%, திருகோணமலை மாவட்டத்தில் 85%, முல்லைத்தீவு மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதுதவிர மொனராகலை மாவட்டத்தில் 80%, பதுளை மாவட்டத்தில் 65%, புத்தளம் மாவட்டத்தில் 73%, மன்னார் மாவட்டத்தில் 77%, அம்பாறை மாவட்டத்தில் 70%, யாழ்ப்பாண மாவட்டத்தில் 47%, மட்டக்களப்பு மாவட்டத்தில்75% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 575 times, 1 visits today)