மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சோம்நாத் சட்டர்ஜி இன்று காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி(89). இவர் கடந்த 2004 – 2009ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இருந்தார்.

அவையை சிறப்பாக நடத்தி நற்பெயர் பெற்றவர். காங்கிரஸின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான கொள்கையை மார்க்சிஸ்ட் கட்சி கொண்டிருந்தது. ஆனால் கட்சியின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, 2008ல் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

தேர்தல்களில் 10 முறை போட்டியிட்டு, ஒரு முறை மட்டுமே மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் தோல்வியுற்றார். இவருக்கு நீண்ட காலமாக சிறுநீரகம் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

(Visited 22 times, 1 visits today)