சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் குலுங்கி, சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

வட அமெரிக்க நாடான அலாஸ்காவின் வடக்கே கக்டோவிக் நகரில் இருந்து, 52 மைல்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் அருகிலுள்ள பகுதிகளை கடுமையாக தாக்கியது.

இதன் காரணமாக ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. இதை உணர்ந்த பொதுமக்கள், அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.

கடந்த 1995ஆம் ஆண்டு வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.2ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தற்போது உண்டாகியுள்ளது.

(Visited 30 times, 1 visits today)