பபுவா மாகாணம் தனாவில் இருந்து நேற்று மாலை ஒக்சில் பகுதிக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 12 வயது சிறுவன் உள்பட 9 பேர் இருந்தனர். இந்த விமானம் ஒக்சில் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விமானம் பெகுனுங்கன் பிண்டாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து மீட்புக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது, 12 வயது சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 28 times, 1 visits today)