ரயில் போக்குவரத்துக்கள் இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என ரயில் இன்ஜின் சாரதிகள் சங்க தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொலன்னறுவை வீட்டில் நேற்று  இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பளப் பிரச்சினை தொடர்பான அமைச்சரவையில் நிறுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவித்ததாகவும் இந்திக தொடங்கொட மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்ற ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் அரசுக்கு 10 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

(Visited 12 times, 1 visits today)