தென்னாபிரிக்க- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மெத்தியுஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், திக்வெல்ல 43 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி 300 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 24.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக பட்சமாக டீ கொக் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்ப்பில் அகில தனஞ்சய 6 விக்கட்டுக்களை கைப்பற்றிக்கொண்டார்

இந்நிலையில் இலங்கை அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டி தொடர்பில் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 25 times, 1 visits today)