லண்டனில் மோசடிப் பேர்வழி விஜய் மல்லையா தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மல்லையா தொழிலதிபர் விஜய் மல்லையா மீது சுமார் 9000 கோடி ரூபாய் வங்கிப் பணத்தை மோசடி செய்த வழக்குகள் பதிவாகியுள்ளன. அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட மல்லையா போலீசுக்கு பயந்து லண்டனில் பதுங்கிவிட்டார்.

இந்நிலையில் மல்லையா அங்கு தங்கியுள்ள பிலீக்ரெட் மேன்ஷனில் அவருக்கா பிரத்யேகமாக தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியரும் எழுத்தாளருமான ஜேம்ஸ் க்ரப்ட்ரீ என்பவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை நேரில் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன வெஸ்டர்ன் டாய்லெட் என்றும் அங்கே டாய்லெட் பேப்பர் மட்டும்தான் தங்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 81 times, 1 visits today)