ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரின் வீட்டிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் படுகாயமடைந்துள்ளார்.

(Visited 50 times, 1 visits today)