கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற முல்லைத்தீவு மீனவர்களின் போராட்ட த்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள் ளார்.

கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை யை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 55 times, 1 visits today)