இராணுவத்தினரை வடக்கிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தவறாகும். அங்கு, இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணிகளே முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முகாம்கள் அகற்றப்படும் போது, அங்கு நிரந்தர வசிப்பிடம் கொண்டவர்களுக்கு அதற்கேற்றவாறு, அக்காணிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவுக்கு,​ கொப்பரா பொருட்களை வழங்கி வைத்துவிட்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கிலோ அல்லது கிழக்கிலோ எந்தவோர் இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது. இராணுவம் குறைக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறாகும். இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது.முகாம்கள் ஒதுக்கப்படும் விகிதத்துக்குகேற்ப, ​அங்கு நிரந்தர வசிப்பிடம் கொண்டவர்களுக்கு அவை வழங்கப்படும் என்றார்.

இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன என்பது தொடர்பாக சந்தேகிக்கத் தேவையில்லை. இராணுவக் குழுக்கள் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன. இராணுவக் கட்டமைப்பில், சகல இராணுக்காலங்களிலும் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவது வழமையாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அவை தொடர்பில், தனிப்பட்ட குழுக்கள் சில, வெவ்வேறான கருத்துகளை வெளியிடுகின்றனர் என்று தெரிவித்தார்.

(Visited 53 times, 1 visits today)