இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றதுடன் பங்களாதேஷ் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் பங்களாதேஷ் அணி 123 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

அதன்படி இலங்கை அணி 215 ஓட்டங்களால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி கொண்டுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை சார்பாக ரொஷேன் சில்வா 70 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் சார்பாக அதிக பட்சமாக மொமினுல் ஹக் 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியினர் டெஸ்ட் தொடரினை 1-0 கணக்கில் கைப்பற்றினர்.

(Visited 57 times, 1 visits today)