சீன அதிபர் ஜிங்பிங்கை கேலி செய்யும் கார்ட்டூன் திரைப்படத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

வின்னி தி பூ அண்ட் புல்தேரி டே என்ற திரைப்படம் 1969ஆம் ஆண்டு சிறந்த சிறிய கதைக்கரு மற்றும்கேலிச்சித்திரத்துகாக ஆஸ்கர் விருதைப் பெற்றது. இப்படத்தில் வரும் பூ என்ற கார்ட்டூன் பாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

பிறகு  இந்த பாத்திரம் பல கார்ட்டூன் படங்களில் இடம்பெற்று புகழ்பெற்றது. தற்போது வின்னி தி பூ கிறிஸ்டோபர் ராபின் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவை ஜிங்பிங் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து நடந்து செல்லும் காட்சியின் புகைப்படத்தையும் வின்னி தி பூ மற்றும் டிக்கர் (மற்றொரு கார்ட்டூன் பாத்திரம்) சேர்ந்து நடந்துசெல்லும் படத்தையும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்தனர்.

இதனால்  ஜிங்பிங் கார்ட்டூன் பாத்திரமான வின்னி தி பூ போல இருப்பதாக கிண்டல் செய்யப்படுவதாகக் கருதி, அந்நாட்டு அரசு வின்னி தி பூ நடிக்கும் புதிய படத்தை தடை செய்திருக்கிறது.

(Visited 20 times, 1 visits today)