எரிபொருள் விலையில் இன்று அல்லது நாளை மாற்றம் ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சூத்திரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ஒரு முறை எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த வகையில் இறுதியாக இடம்பெற்ற எரிபொருள் விலை அதிகரிப்பு கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை இம்மாதம் அதிகரிக்குமா? குறையுமா? என இராஜாங்க அமைச்சரிடம் வினவியதற்கு,

அது குறித்து எதனையும் குறிப்பிட முடியாது எனவும், இருப்பினும், முறையான வேண்டுகோளின் பேரில் எவருக்கும் விலைச் சூத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(Visited 13 times, 1 visits today)