முல்லைத்தீவு, நந்திக்கடல் சந்திக்கு அருகில இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் காயமடைந்துள்ளார்.

அவர் பயணித்த கெப் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அவருக்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் மற்றும் காயமடைந்த ஏனையவர்கள் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 46 times, 1 visits today)