வடமாகாண அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அமைச்சரவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 129வது அமர்வு இன்று யாழ் கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் அவை தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. வடமாகாண அமைச்சர்கள் யார் எனபது தொடர்பில் அண்மை காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளினால் மாகாண அமைச்சுக்குட்பட்ட விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட மாகாண அமைச்சர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்துமாறு வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சின்னதுரை தவராசா கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

இது தொடர்பில் உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.

குறித்த வாத பிரதிவாதம் இடம்பெறும் போது முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. அதனை தொடர்ந்து முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய நான்கு பேரையும் அமைச்சர்கள் என குறிக்கும் பெயர் பலகை அகற்றப்பட்டிருந்தது. இது குறித்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் சில நிபந்தனைகளை வட மாகாண முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார்.

இவ்விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது வடமாகாண முதலமைச்சர் உரிய ஆலோசனைகளை பெற்று ஆளுனர் ஊடாக இப்பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளும் தரப்பினரால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை தலைவரினால் அது வாசிக்கப்பட்டது.

(Visited 54 times, 1 visits today)