இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் சாரல் மழை பெய்வதால் ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டனில் இன்று ஆரம்பமாகிறது. ஆனால் போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் சாரல் மழை பெய்வதால் ‘நாணயச்சுழற்சி’ போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)