உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர புகையிரத தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மாலை சில புகையிரத தொழிற்சங்கள் சடுதியாக ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளின் நலன்கருதி விசேட பஸ் சேவைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த பஸ் சேவைகளுக்கான செலவினங்களை நிதி மற்றும் ஊடக அமைச்சு பொறுப்பேற்குமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 25 times, 1 visits today)