ஆஸ்திரேலிய நாட்டின் மக்கள் தொகை கணித்ததை விட முன்பாகவே 2.5 கோடி மக்கள் தொகையை எட்டியுள்ளது.

ஆஸ்திரேலிய புள்ளிவிவர அமைப்பு வெளியிட்டுள்ள விவரப்படி 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2.5 கோடி மக்கள் தொகையை அந்நாடு அடைந்துள்ளது.

பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்துள்ளவர்களால் ஏற்பட்டுள்ளது என்றும் 62மூ மக்கள் தொகை உயர்வுக்கு காரணம் இதுவே என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர 38மூ மக்கள் தொகை உயர்வு இயல்பாகவே உயர்ந்திருக்கிறது என்றும் அந்த அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே அந்நாட்டின் மக்கள் தொகை 2.6 கோடியை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

(Visited 66 times, 1 visits today)