இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலைக் கண்காணிக்க, நான்கு நாடுகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரிலேயே இந்தக் கண்காணிப்புக் குழு இலங்கை வந்திருப்பதாக, ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் இந்தியர்கள் நால்வரும், தென்கொரியா, இந்தோனேசியா, மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து தலா இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று வாக்குப்பெட்டிகள் அனுப்பப்படும் நடைமுறைகளை கண்காணிக்க் தொடங்கிய இந்த வெளிநாட்டு கண்காணிப்புப் குழுவினர் இன்று பல்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்கும் செய்து பார்வையிடுவர்.

இவர்கள் நாளை தமது அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தமது அறிக்கையை சமர்ப்பிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 29 times, 1 visits today)