என்னுடைய வாழ்க்கையிலும் பாலியல் சம்பவம் நடந்தது என்று மணிரத்னம் பட நடிகை அதிதிராவ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகை அதிதி ராவ்  மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்தப் படத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது இவர் தமிழைத்தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்த வருகிறார். இவர் தனக்கு பாலிவுட் சினிமாவில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமான கருத்துகளை கூறி வருகிறார். இப்போது நடிகை அதிதி ராவ் பாலிவுட் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறி மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

(Visited 67 times, 1 visits today)