அஜித் தற்போது ஹவிஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில்  படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக திலீப் சுப்பராயன் தலைமையிலான சண்டை பயிற்சியாளர்கள் ஐதராபாத்தில் முகமாமிட்டுள்ளனர்.

சமீபத்தில் படத்தின் சென்டிமெண்ட் காட்சியும்  கிராமியக் கலைஞர்கள் அடங்கிய பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் அஜித்துடன் தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

(Visited 27 times, 1 visits today)