பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் ஹபியார் பிரேமா காதல்’. புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஹஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்’ சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும்  ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்தார்கள்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவானதால், தங்களுடைய படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திரைப்படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)