உலகின் மிக அழகான பெண்களின் ஒருவராக வர்ணிக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும் (43) அவரது கணவர் பிராட் பிட்டுக்கும் (54) கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியதால் கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

ஏஞ்சலினா-பிராட் பிட் தம்பதிக்கு பெற்ற குழந்தைகள் 3 பேரும்  வளர்ப்பு குழந்தைகள் மூன்று பேரும் உள்ள நிலையில், விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குழந்தைகளை பராமரிக்க பிராட் பிட் அர்த்தமுள்ள எந்த உதவியும் செய்யவில்லை என ஜோலி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என ஜோலி நீதிபதியிடம் கெஞ்சி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏஞ்சலினாவும் ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டும் கடந்த 2004ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் 2014ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

ஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோரை விவாகரத்து செய்த பின் ஏஞ்சலினா, பிட்டை திருமணம் செய்தார். அதேபோல் பிட்டுக்கு இது இரண்டாவது திருமணம். அவர் முதல் மனைவி ஜெனிபரை விவாகரத்து செய்துவிட்டு ஏஞ்சலினாவை திருமணம் செய்தார்.

(Visited 44 times, 1 visits today)