அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மற்றொரு பெரிய அடி விழுந்து உள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பாலியல் குற்றசாட்டால் பதவி விலகி உள்ளார். இவ்வாறு பதவி விலகும் இரண்டாவது அதிகாரி ஆவார்.

வெள்ளை மாளிகையின் உரையாசிரியர் டேவிட் சோரன்சென் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

சோரன்சென்னின் முன்னாள் மனைவியான ஜெசிகா கார்பெட், 2.5 வருட திருமணத்தில் அவர் “வன்முறை மற்றும் உணர்ச்சிவசப்பட்டு துன்புறுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இருப்பினும், சோரன்சென் இந்த் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், அவர் “தவறான உறவால் பாதிக்கப்பட்டவர்” என்று கூறி உள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ராஜ் ஷா அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஊடகங்களால் நாங்கள் தொடர்பு கொள்ளப்படுவதற்கு முன்பு, இது போன்ற குற்றசாட்டுகள் இருந்தன என்று நேற்று இரவு நாங்கள் அறிந்தோம். இது குறித்து அந்த ஊழியரை கேட்டு உறுதிபடுத்தி கொண்டோம். அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் இருந்தும் அவர் இன்று பதவி விலகினார் என கூறி உள்ளார்.

இதற்குமுன் மற்றொரு வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் ராப் போர்ட்டர் தனது இரண்டு முன்னாள் மனைவிகள் கோல்லி ஹோல்டரன்ஸ் மற்றும் ஜெனிபர் வில்லோபி ஆகியோர் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளால் பதவி விலகினார். அவரும் தனது குற்றசாட்டை மறுத்து இருந்தார்.

(Visited 100 times, 1 visits today)