கோல்ப் விளையாட்டின்போது பந்து முகத்தில் பட்டு, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனின் பல் உடைந்தது.
எனினும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31ஓட்டங்களில் வென்றது.
முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, புரோட் மற்றும் ஆன்டர்சன், கோல்ப் விளையாடியுள்ளனர். அப்போது ஆன்டர்சன் விளையாடுவதை வீடியோ எடுத்துள்ளார் புரோட்.

அன்டர்சன் அடித்த பந்து, அருகில் உள்ள மரத்தில் பட்டு தெறித்து, அன்டர்சனின் முகத்தில் பட்டுள்ளது. இதில், அன்டர்சனின் பல் உடைந்துள்ளது. இந்த நிலையில், லோர்ட்ஸ் மைதானத்தில் நாளை 9 ஆம் திகதி நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அன்டர்சன் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 44 times, 1 visits today)